நேற்று என்னுடைய இந்த பதிவில் ISRO நிறுவனத்திற்கும், தேவாஸ் மல்டி மீடியா நிறுவனத்திற்கும் இடையில் உருவான முறைகேட்டிற்கு வாய்ப்பிருக்கக் கூடிய ஒப்பந்ததைப் பற்றி எழுதியிருந்தேன். இன்று நாளிதழ்களில் இதைப் பற்றி சில மேலதிகத் தகவல்கள் வந்துள்ளன.
தேவாஸ் நிறுவனம் ஹிந்து பத்திரிகை வெளியிட்ட செய்தி அறிக்கையை மறுத்து இன்று ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளது. எங்களுக்கு ஏர்டெல், BSNL ஆகியவற்றிற்கு வழங்கப்பட்டது போல அலைக்கற்றை உரிமம் எதுவும் வழங்கப்படவில்லை. ட்ரான்ஸ்பாண்டருடன் 70 MHZ அலைவரிசையையும் சேர்த்துக் குத்தகைக்கு எடுத்திருக்கிறோம். ட்ரான்ஸ்பாண்டரும், அலைவரிசையும் ISRO பெயரில்தான் உள்ளது என்கிறது.
இதில் ஒரு அடிப்படையான கேள்வி என்னவென்றால் குத்தகை என்பது ஒரு வருடம், இரு வருடமாக இருந்தால் சரி. ஆனால் இருபது வருடம் எனும்போது அது நிறுவனத்தின் சொத்து போலல்லவா ஆகி விடுகிறது? அப்படி இருக்கும்போது ISRO இந்த அலைக்கற்றைக்குத் தனியே சரியான விலையை ஏன் நிர்ணயிக்கவில்லை என்ற கேள்வி எழுகிறது.
மத்திய அரசாங்கமும், ISRO வும் இந்த ஒப்பந்தம் மறுபரிசீலனை செய்யப்பட்டுக் கொண்டிருக்கிறது என்று அறிவித்துள்ளது.
மத்திய கணக்குத் தணிக்கைக் குழு (CAG) இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கணக்குத் தணிக்கை பூர்வாங்க நிலையில்தான் உள்ளது. இரண்டு லட்சம் கோடி இழப்பு என்பது ஒரு தோராயமான கணக்கு. இறுதி அறிக்கை வெளியிடும்போது அனைத்துத் தகவல்களும் துல்லியமான முறையில் வெளியிடப்படும் என்று சொல்லியிருக்கிறது.
பா.ஜ.க வும், கம்யூனிஸ்ட்களும் இந்த விவகாரத்தையும் பாராளுமன்ற கூட்டுக் குழு விசாரணையில் இணைக்க வேண்டுமென்று குரல் கொடுக்க ஆரம்பித்திருக்கிறார்கள்.
இந்த வருட நிதிநிலை அறிக்கைக் கூட்டத் தொடரை இந்த விவகாரம் வீணடித்து விடுமென்றே தோன்றுகிறது.

1 comment:
Post a Comment